ரயில்வே சொத்துக்கள், பயணியர் பகுதி, பயணியர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை ரயில்வே பாதுகாப்புப் படை உறுதி செய்கிறது. இது தொடர்பான விவகாரங்களையும் அது கையாள்கிறது. நாட்டின் பாதுகாப்பு நலன் தொடர்பான மற்ற பொறுப்புகளிலும் ரயில்வே பாதுகாப்புப் படை ஈடுபட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க நார்கோஸ் நடவடிக்கை மூலமும், ஆள் கடத்தைலைத் தடுக்க ஏஏஎச்டி நடவடிக்கை மூலமும் நாடு முழுவதும் ரயில்வே பாதுகாப்புப் படை மாதந்தோறும் சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.4.7 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களைக் கைப்பற்றியது. 35 சிறுவர்கள் மற்றும் 27 சிறுமிகளை மீட்டது. இது தொடர்பாக 83 பேர் கைது செய்யப்பட்டு 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ஆள் கடத்திலில் ஈடுபட்ட 19 பேர் மீது நடவடிக்கை எடுக்க உரிய அமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
எஸ்.சதிஸ் சர்மா