விமானிகள் பயிற்சி நிறுவனங்களை ஊக்கப்படுத்த தளர்வுகள் செய்யப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள்.

நாட்டில் விமானிகள் பற்றாக்குறையை சரிசெய்ய விமானிகள் பயிற்சி நிறுவனங்களை அமைப்பதற்கு தளர்வுகள் செய்யப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் திரு வி கே சிங் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இன்று, கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், விமான நிலைய உரிமத்தொகை (விமானிகள் பயிற்சி நிறுவனத்தால் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கு செலுத்தப்படும் தொகையின் பங்கு) ரத்து செய்யப்பட்டுள்ளது; நில வாடகை, கணிசமான அளவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். பராமரிப்பு, பழுதுப்பார்ப்பு மற்றும் இயக்குவதை செயல்படுத்துவோரின் தன்மை எதுவாக இருந்தாலும் உரிமத்தொகை, கூடுதல் வரி எதுவுமில்லாமல் திறந்த ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படும்.  இதன் மூலம் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கு நில ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.  

தேவையையும், வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, ஹெலிகாப்டர் இயக்கப்படுவதை ஊக்குவிக்க ஹெலிகாப்டர் இயக்குவதற்கான கொள்கையையும் அரசு உருவாக்கியுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

தற்போது நாட்டில் 30 சர்வதேச விமான நிலையங்கள் இருப்பதாக கூறிய அமைச்சர், பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உட்பட விமானப் போக்குவரத்து தொடர்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தொடர்ந்து விமானங்களை இயக்குவோருடன் பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். 

எம். பிரபாகரன்

Leave a Reply