நதி நகரங்கள் கூட்டணியின் உறுப்பினர்களின் நகர்ப்புற நதிகளுக்கான ஒட்டுமொத்த செயல் திட்டத்திற்கு வழிவகுத்தல் (தாரா) என்ற வருடாந்திர கூட்டத்தை தேசிய நகர்ப்புற விவகாரங்கள் கழகத்துடன் இணைந்து தூய்மை கங்கா தேசிய இயக்கம், புனேவில் பிப்ரவரி 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் நடத்த உள்ளது. துவக்க விழாவில் மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் முக்கிய உரை வழங்குவார். மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு கௌஷல் கிஷோர், இரண்டாம் நாளன்று கூட்டத்தின் நிறைவு விழாவில் உரையாற்றுவார்.
உள்ளூர் நீர் நிலைகளின் மேலாண்மைக்கான தீர்வுகள் குறித்து ஆணையர்கள், கூடுதல் ஆணையர்கள், தலைமை பொறியாளர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் ஆலோசிப்பதற்கான வாய்ப்பை தாரா 2023 வழங்கும். இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சியான நகர்ப்புறம்20 உடன் தாரா 2023 நிகழ்வு ஆழமான இணைப்பைக் கொண்டுள்ளது.
இரண்டாவது நாளன்று யோகா அமரவும், முல்லா முத்தா ஆற்றுக்கு நேரடி பயணமும் மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு, தெலங்கானா, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட், பிகார், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் முதன்மைச் செயலாளர்கள் (நகர்ப்புற மேம்பாடு) கலந்து கொள்ளும் அமர்வில் நகர்ப்புற நதிநீர் மேலாண்மையுடன் சம்பந்தப்பட்ட முக்கிய திட்டங்களை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.
2021-ஆம் ஆண்டு 30 நகரங்களுடன் தொடங்கிய நதி நகரங்கள் கூட்டணியில், தற்போது 95 நகரங்கள் உறுப்பினராக உள்ளன. நகர்ப்புறங்களில் உள்ள நதிகளின் நிலையான மேலாண்மை குறித்த தகவல்களை இந்தியாவில் உள்ள நதிகள் அமைந்துள்ள நகரங்கள் பரிமாறிக்கொள்வதற்க பிரத்தியேக தளமாக இத்திட்டம் தொடங்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.
திவாஹர்