ஹரிவராசனம் நூற்றாண்டு விழா மற்றும் குருசாமிகள் வந்தன விழா சென்னையில் நடைபெற்றது.

சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில்
பானியன் திருமண மண்டபத்தில் (19.02.23) அன்று சபரிமலை அய்யப்ப யப்பா சேவா சமாஜம் சார்பில் ஹரிவராசனம் நூற்றாண்டு
விழா மற்றும் குருசாமிகள் வந்தன விழா மற்றும் ஐயப்பா தீயாட்டு சிறப்பு பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

திய்யாடி ராமன் நம்பியார் தீயாட்டு பூஜை செய்தவர். இந்த பூஜை அதிகாலை கணபதி ஹோமமும்,கூரை சமர்பணமும், நாளிகேரம் சமர்பணமும்,உச்சம் பாட்டை தொடர்ந்து பஞ்சவர்ண பொடிகளால் ஐயப்பா சாமி குதிரை வாகனத்தில் களமெடுத்து கோலம் போடுதல் நிகழ்ச்சியும்,
அன்னதானம் போன்ற பல நிகழ்வுகள் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியை சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் மாநில தலைவர் ஜெயச்சந்திரன் அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

ஹரிவராசனம் எழுதி (1923-2023) நூறு ஆண்டுகள் ஆகிவிட்டதை முன்னிட்டு இந்த விழா நடைப்பெற்றது. சபரிமலைக்கு செல்லும் குருசாமிகள் எப்படி இருக்க வேண்டும். மற்ற ஐயப்ப பக்தர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் மாநில பொது செயலாளர் ஜெயராம் அவர்கள் கூறினார். இதை தொடர்ந்து பரத நாட்டிய நிகழ்ச்சியும், பெரம்பூரில் உள்ள கேந்தர் வித்யாலா பள்ளியில் பயிலும் 100 மாணவர்கள் ஹரிவராசனம் பாடினார்கள்.

இதை தொடர்ந்து பல வருடம் சபரிமலைக்கு சென்று வந்த குருசாமிகளுக்கு பொன்னாடை அணிவித்து சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கெளரவித்தார்கள்.

இந்நிகழ்வில் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் மாநில தலைவர் ஜெயச்சந்திரன், மாநில பொது செயலாளர் ஜெயராம், மாநில பொருளாளர் நாகராஜன் , மாநில நிர்வாகிகளான சுவாமி ரத்தினம்,குமார்,
கணேஷ்,பாலுசாமி, வெங்கட்ராமன், சுதாகர்,ராஜேந்திரன் ராகவன், ரவிச்சந்திரன்,
ஶ்ரீனிவாசன்,பிரபு, ராதாகிருஷ்ணன் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.

அரவிந்தன்.

Leave a Reply