டிரைப்ஸ் இந்தியா ஸ்டோர் தயாரிப்புகள் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு, புவிசார் குறியீடு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டது.

வணிகவியல் துறை  மற்றும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை , வணிகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு  திட்டம், முழுமையான சமூக-பொருளாதாரத்தை மேம்படுத்தும் அதே வேளையில் மாவட்ட அளவில் நிலையான வேலைவாய்ப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்து,  விளம்பரப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா  மற்றும் இந்தியாவின் தற்போதைய ஜி20  தலைமைத்துவத்தின்  மூலம், மத்திய அரசின்  பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்த கண்ணோட்டத்தை மேலும் மேம்படுத்துவதற்காக, மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில்  பிப்ரவரி 16-27 வரை பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு  ஏற்பாடு செய்துள்ள ஆதி பெருவிழாவில்  ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு,   புவிசார் குறியீடு கொண்ட  தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், திரு பியூஷ் கோயல்,  ஒவ்வொரு நிறுவனமும் திட்டத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இது நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்க உதவும் என்று அவர் கூறினார்.

திவாஹர்

Leave a Reply