இந்தியாவுக்கான ஆஸ்திரிய தூதர் தலைமையிலான பிரதிநிதிகள் குழு நிதின் கட்கரியுடன் சந்திப்பு.

இந்தியாவுக்கான ஆஸ்திரிய தூதர் திருமிகு கேத்தரினா விய்சர் தலைமையிலான பிரதிநிதிகள் குழு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை இன்று சந்தித்தது.

சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களில் பசுமை தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த கருத்துக்களை இருதரப்பினரும் பரிமாறிக் கொண்டனர். ஆஸ்திரிய நிறுவனங்களின் பிரதிநிதிகள், தங்களது நிறுவனங்களில் தயாரிக்கப்படும் புதுமையான உற்பத்திப் பொருட்கள் நவீனத்துவம் வாய்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து அமைச்சரிடம் விளக்கினார்.

இந்தியாவில் பல்வேறு கம்பிவட ஊர்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக திரு.கட்கரி தெரிவித்தார். ஆஸ்திரிய நிறுவனங்களின் மிகச் சிறந்த உயர் தரம் வாய்ந்த கம்பிவட ஊர்தி பாகங்களுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார். ஒட்டு மொத்த செலவைக் குறைக்க இந்தியாவில் உற்பத்தி நிலையங்களை அமைக்க முன்வர வேண்டுமென்று நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply