மின்சாரத்தைக் கொண்டு செல்லும் நடைமுறையில் நவீனத்தையும், வேகத்தையும் இந்தியா கொண்டிருக்க வேண்டும் என்று 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்டப் பணிக்குழு பரிந்துரைத்துள்ளது.
இப்பரிந்துரையை ஏற்பதாக மத்திய மின்துறை அமைச்சர்
திரு ஆர்.கே.சிங் கடந்த வாரம் அறிவித்தார். மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் அளிக்க வேண்டும் என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையை அடைய மின்சாரத்தைக் கொண்டுசெல்லும் நவீன கட்டமைப்பு முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் கூறியுள்ளார். இணையதள தாக்குதல், இயற்கை பேரிடர் ஆகியவற்றுக்கு எதிராக முழுமையான தானியங்கி அமைப்பைக் கொண்ட கட்டமைப்பு அவசியம் என்று கூறினார்.
எம்.பிரபாகரன்