5 மாநிலங்களுக்கு ரூ. 1,816.162 கோடி அளவிற்கு கூடுதல் நிதியுதவி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்நிலைக்குழு கூட்டத்தில் ஒப்புதல்.

தேசியப் பேரிடர் மீட்பு நிதியின் கீழ் கடந்த 2022-ம் ஆண்டில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, பெரும்மழை காரணமாக பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு ரூ. 1,816.162 கோடி அளவிற்கு கூடுதல் நிதியுதவி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா தலைமையிலான உயர்நிலைக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  

அஸாமிற்கு ரூ. 520.466 கோடி

இமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ. 239.31 கோடி

கர்நாடகாவிற்கு ரூ.941.04 கோடி

மேகாலயாவிற்கு ரூ.47.326 கோடி

நாகலாந்திற்கு ரூ.68.02 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் மாநிலப் பேரிடர் மீட்பு நிதிக்கு 25 மாநிலங்களுக்கு ரூ.15,770.40 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. தேசியப் பேரிடர் மீட்பு நிதியிலிருந்து 4 மாநிலங்களுக்கு ரூ.502.744 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

திவாஹர்

Leave a Reply