ரயில் பாதையை 100 சதவீதம் மின்மயமாக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் இந்திய ரயில்வே விரைவாக முன்னேறுகிறது .

இந்திய ரயில்வேயை உலகில் மிகப்பெரிய பசுமை ரயில்வே மயமாக்கும் வகையில், இந்திய ரயில்வே 2030-ம் ஆண்டுக்கு முன்பாக கார்பன் உமிழ்வை பூஜ்ஜியம் நிலைக்கு கொண்டுவரும் நிலையில் தீவிரமாகச் செயல்பட்டு முன்னேறிச் செல்கிறது. உத்திரப்பிரதேசத்தில் அண்மையில் மின்மயமாக்கப்பட்ட பிறகு இந்திய ரயில்வே மற்றுமொரு மைல்கல் சாதனையைப் படைத்துள்ளது. உத்தராகண்டில் மின்மயமாக்கல் பணியை இந்திய ரயில்வே நிறைவு செய்துள்ளது.

உத்தராகண்டில் தற்போது உள்ள 347 கிலோ மீட்டர் தொலைவிலான அகல ரயில்பாதை 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டதன் மூலம் செலவு குறைக்கப்பட்டு சேமிக்கப்பட்டுள்ளது. அதிக விசைத்திறனுடன் ரயில் எஞ்ஜின் பராமரிப்பு மற்றும் இயக்குவதற்கான செலவுக் குறைவு, இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை சார்ந்து இருப்பதை குறைப்பதுடன், போக்குவரத்துக்கேற்ற சூழல், அந்நியச் செலாவணி சேமிப்பு உள்ளிட்ட பயன்கள் கிடைக்கிறது.

திவாஹர்

Leave a Reply