தமிழக மீனவர்கள் மீண்டும், மீண்டும் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், எல்லைதாண்டுகிறார்கள் என்று குற்றம்சாட்டுவதும் தொடர்கதையாக உள்ளது.
இலங்கை கடற்படையினரால் 16 மீனவர்கள் கைது செய்யப்பட்டும், இரண்டு விசைப்படகுகளை பறிமுதல் செய்யப்பட்டும், அவர்களை பருத்திதுறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்துகின்றனர். இதுபோன்ற விசாரணை முடிந்தவுடன் அவர்களை நாட்டிற்கு உரிய நேரத்தில் திருப்பி அனுப்ப வேண்டும். ஆனால் அவர்களை விசாரணை என்ற பெயரில் கைது செய்து பலநாட்கள் சிறையில் வைப்பதால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுகிறது.
அதோடு கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு என்ன ஆனதோ என்ற அச்சத்திலும், பயத்திலும் நிம்மதியின்றி தவிக்கின்றனர். தங்களின் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் பிரச்சனை முற்றுப்பெறாமல் ஒவ்வொருநாளும் தொடர்வது வேதனைக்குரியது.
தமிழக மீனவர்கள் பிரச்சனையில் உடனடியாக இந்திய வெளியுறவுத்துறை இலங்கை அரசுடன் பேசி, அமைச்சர் இலங்கை அரசுடன் பேசி, கைது செய்யப்பட்ட செய்யப்பட்ட மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வலியுறுத்துகிறேன்.
கே.பி.சுகுமார்