நான்கு மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தின் 19 மாவட்டங்களில் உள்ள 46 எல்லைப்புற பகுதிகளின் விரிவான வளர்ச்சிக்காக மத்திய அரசின் துடிப்புமிக்க கிராமங்கள் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நான்கு மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தின் 19 மாவட்டங்களில் உள்ள 46 எல்லைப்புற பகுதிகளின் விரிவான வளர்ச்சிக்காக  மத்திய அரசின் துடிப்புமிக்க கிராமங்கள் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில் அருணாச்சலப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம், சிக்கிம், உத்தராகண்ட் மாநிலங்களும் லடாக் யூனியன் பிரதேசமும் அடங்கும். இத்திட்டத்திற்கு 2022-23ம் ஆண்டு முதல் 2025-26ம் நிதி ஆண்டு வரை 4,800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இத்திட்டத்தின் முன்னுரிமை அடிப்படையில் 662 எல்லைப்புற கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் அருணாச்சலப் பிரதேசத்தில் 455 கிராமங்களும், ஹிமாச்சலப் பிரதேசத்தில் 75 கிராமங்களும், லடாக்கில் 35 கிராமங்களும், சிக்கிமில் 46 கிராமங்களும், உத்தராகண்டில் 51 கிராமங்களும் இடம் பெற்றுள்ளன.

இத்தகவலை மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு. நிசித் பிரமானிக் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply