குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேரளா, தமிழ்நாடு, லட்சத்தீவில் மார்ச் 16 முதல் 21 வரை சுற்றுப் பயணம் செய்கிறார்.

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கேரளா, தமிழ்நாடு, லட்சத்தீவில் மார்ச் 16 முதல் 21, 2023 வரை சுற்றுப் பயணம் செய்கிறார்.

மார்ச் 16, 2023 அன்று கொச்சியில் உள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை பார்வையிடும் அவர், ஐஎன்எஸ் துரோணாச்சாரியா கப்பலுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்க உள்ளார்.

மார்ச் 17, 2023 அன்று கொல்லத்தில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்திற்கு குடியரசுத் தலைவர் செல்கிறார். அதே நாளில் திருவனந்தபுரத்தில் அவருக்கு அளிக்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். கேரளப் பெண்களின் சமகால கதைகளான குடும்பஸ்ரீ@25-ஐ தொடங்கி வைக்க உள்ளார்.

மார்ச் 18, 2023 அன்று தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகிய இடங்களில் குடியரசுத் தலைவர் மரியாதை செலுத்த உள்ளார். அன்று மாலை கவரட்டியில் அவருக்கு அளிக்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்.

மார்ச் 19, 2023 அன்று கவரட்டியில் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் குடியரசுத் தலைவர் உரையாட உள்ளார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply