புதுதில்லியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் ராணுவத்தில் மனிதப் பொறியியல் குறித்த 2 நாள் பயிலரங்கை முப்படைகளின் தலைமைத் தளபதி ஜென்ரல் அனில் சவுகான் மார்ச் 15, 2023 அன்று தொடங்கி வைத்தார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தில்லி ஆய்வகம், பாதுகாப்பு உடலியில் மற்றும் சார்பு அறிவியல் கழகம் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், மனிதப் பொறியியலின் அறிவியல் ரீதியான அமலாக்கத்தை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டு இப்பயிலரங்கு நடைபெறுகிறது.
அப்போது பேசிய முப்படைகளின் தலைமைத் தளபதி, ராணுவ வீரர்களுக்குத் தேவையான உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் தரமான வடிவமைப்பிற்கு மனிதப் பொறியியல் தேவையின் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.
எஸ்.சதிஸ் சர்மா