சுங்கம், கலால் மற்றும் சேவைவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தமது 40 ஆண்டு கால வெற்றி பயணத்தை நாளை கொண்டாடுகிறது. இந்த விழாவின் தொடக்க விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி திரு தினேஷ் மகேஸ்வரி தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார், தில்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு சத்தீஷ் சந்திர சர்மா கவுரவ விருந்தினராக கலந்து கொள்கிறார். நிதி அமைச்சகத்தின் வருவாய்த்துறையின் தலைவரான திரு சஞ்சய் மல்கோத்ரா, மத்திய மறைமுக வரிகள் மற்றும் கலால் வாரியத்தின் தலைவர் திரு விவேக் ஜோரி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். இந்த மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் 40 ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விழா மலர் வெளியிடப்படுகிறது.
எஸ்.சதிஸ் சர்மா