சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘ஹெர் ஸ்டார்ட்’ தளம் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும்!- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘ஹெர் ஸ்டார்ட்’ தளம் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையிலும், பெண்கள் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை தொடங்க வழிவகை செய்யும் என்று  மத்திய அமைச்சர் அறிவியல்,  தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை   இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்  தெரிவித்துள்ளார்.

தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு  நடத்திய பாரத் ஸ்டார்ட்-அப் கருத்தரங்கம் மற்றும் எக்ஸ்போ-2023 நிகழ்வில்  பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், “பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு  ஓராண்டு காலகட்டத்தில் மாதந்தோறும் ரூ.20,000 உதவித்தொகையை வழங்கும் திட்டத்தை  பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தொடங்கியுள்ளது”  என்றார்

“இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தில் தொழில்முனைவு ஆற்றல் ஒன்றிணைந்துள்ளது.  தொழிற்சாலைகளோடு இணைந்து பாடத்திட்டம் மற்றும் நிறுவனங்களை அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலமாக மேம்படுத்தி குறைந்த காலகட்டத்தில் தயாரிப்புகளை வெளிக் கொண்டுவர வேண்டியது முக்கியமானதாகும். புத்தாக்க நடவடிக்கைகளுக்கு இந்தியா முக்கிய ஆதாரமாக முன்னேறி வருகிறது என்றார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply