இந்திய கடற்படையின் தென் பகுதியான கொச்சியை தளத்தைச் சேர்ந்த ஐஎன்எஸ் சுஜாதா கப்பல் மொசாம்பிக் நாட்டின் மாபுட்டோ துறைமுகம் சென்றடைந்தது. துறைமுகத்தில் கப்பலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மொசாம்பிக் நாட்டில் நடைபெற்ற பயிற்சியில் 19, 20 ஆகிய தேதிகளில் இந்த கப்பல் பங்கேற்றது. மொசாம்பிக் நாட்டில் கடற்படை அதிகாரிகளைச் சந்தித்து, ஐஎன்எஸ் சுஜாதா கமாண்டிங் ஆபீசர் ஆலோசனை நடத்தினார்.
மொசாம்பிக் கடற்படையைச் சேர்ந்த 40 பேர் கப்பலுக்கு வந்து அதில் உள்ள நவீன வசதிகளை பார்வையிட்டனர். கப்பலின் மொசாம்பிக் பயணம் இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையிலான இருதரப்பு உறவை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.பிரபாகரன்