மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான மோதலுக்கு தீர்வுகாணும் வகையில் 14 வழிகாட்டுதல்களை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் இன்று வெளியிட்டார். இந்த மோதல்களை செயல்திறன்மிக்க வகையில் குறைப்பதை இது நோக்கமாக கொண்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள் அறிவுறுத்தல்களாக உள்ள நிலையில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே நல்லிணக்கத்தை உருவாக்கவும் வகை செய்கிறது. இந்தியா –ஜெர்மன் கூட்டுமுயற்சியில் இந்த வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
வனவிலங்கு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மனிதர்களுக்கும், யானைகள், சிறுத்தைகள். பாம்புகள், முதலைகள், காட்டுப்பன்றிகள், கரடிகள், மான்கள் போன்ற விலங்குகளுக்கும் இடையிலான மோதலை குறைப்பதே இதன் நோக்கமாகும்.
2018 ஆகஸ்ட் மாதம் முதல் 2022 பிப்ரவரி மாதம் வரை சுமார் 105 நிகழ்ச்சிகள் இது தொடர்பாக நடத்தப்பட்டு அதில் 1600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.