விமானப் பயணிகள் டிஜி யாத்ரா (Digi Yatra) செயலியை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஏனெனில், இந்த செயலி மூலம் பயணிகள் தொடர்பான தகவல்கள் அவர்களது சொந்த சாதனத்திலேயே சேமிக்கப்படுகிறது.
நுழைவுவாயிலில் 2டி பார் குறியீடு ஸ்கேன் வசதி செய்யப்பட்டு இருப்பதன் மூலம் தடையில்லாமல் பயணிகள் செல்ல முடியும். விமான சேவை நிறுவனங்கள் பார் குறியீட்டுடன் டிக்கெட்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன் மூலம் பயணிகள் நுழைவு/பாதுகாப்பு வாயில்களில் தடையின்றி செல்ல முடியும். விமான நிலையங்களில் நெரிசலைத் தவிர்க்க இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த தகவலை மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஜெனரல் (டாக்டர்) வி கே சிங் (ஓய்வு) தெரிவித்தார்.
திவாஹர்