உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரரான லவ்லினா போர்கோஹைனுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில்  தங்கப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரரான  லவ்லினா போர்கோஹைனுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:

“உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மிகப்பெரிய சாதனையைப் புரிந்த லவ்லினா போர்கோஹைனுக்கு @LovlinaBorgohai வாழ்த்துகள். அவர் அற்புதமான திறனை வெளிப்படுத்தினார். அவர் தங்கப்பதக்கம் வென்றதை அறிந்து இந்தியா மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.”

திவாஹர்

Leave a Reply