மத்திய விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய எம் சிந்தியா அமிர்தசரஸ்-கேட்விக் இடையே நேரடி விமான சேவையை தொடங்கி வைத்தார் .

மத்திய விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்ய எம் சிந்தியா, அமிர்தசரஸ்-கேட்விக் நகரங்களுக்கு இடையே நேரடி விமான சேவையை இன்று தொடங்கி வைத்தார்.

அமிர்தசரஸ்-கேட்விக் இடையே இடைநில்லா விமான சேவையை ஏர்இந்தியா நிறுவனம் இன்று முதல் வழங்குகிறது.

இந்நிகழ்ச்சியில் பேசிய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்ய எம் சிந்தியா, புதிய சர்வதேச போக்குவரத்து மூலம் பிராந்தியம் வளர்ச்சி பெறும் என்று கூறினார். இங்கிலாந்தில் லட்சக்கணக்கான பஞ்சாப் மக்கள் வசித்து வரும் நிலையில், இந்த புதிய சேவை 2 நாடுகளிலும் வசிக்கும் குடும்பத்தினரை இணைக்கும் என்று தெரிவித்தார்.

இந்த விமான சேவை வாரத்திற்கு 3 நாட்கள் இயக்கப்படும் என்றும், அமிர்தசரஸ்-இங்கிலாந்து இடையே இயக்கப்படும் 3-வது சேவை இதுவாகும் என்றும் அவர் கூறினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply