முதலாவது ஜி20 வர்த்தகம் மற்றும் முதலீட்டு பணிக்குழுக் கூட்டம் மும்பையில் மார்ச் 28-30, 2023-ல் நடைபெறுகிறது .

முதலாவது ஜி20 வர்த்தகம் மற்றும் முதலீட்டு பணிக்குழுக் கூட்டம் மும்பையில் மார்ச் 28-30, 2023-ல் நடைபெறுகிறது.  இந்த 3 நாள் கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகள், அழைப்பு நாடுகள், பிராந்தியக் குழுமங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 50-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் ஏற்கனவே மும்பை வந்தடைந்துள்ளனர்.

முதலாவது வர்த்தகம் மற்றும் பணிக்குழுக் கூட்டம் குறித்து மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வர்த்தகத்துறை செயலாளர், முதல் நாளான மார்ச் 28 அன்று வர்த்தக நிதி குறித்த சர்வதேச மாநாடு நடைபெறும் என்று கூறினார். வங்கிகள் நிதி நிறுவனங்களின் பங்கு, நிதி நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி கடன் முகமைகளின் மேம்பாடு உள்ளிட்டவைக் குறித்து 2 அமர்வுகளில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

திவாஹர்

Leave a Reply