யுவ சங்கம் (இரண்டாம் கட்டம்) 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 1000 இளைஞர்கள் பங்கேற்பதற்கான ஆன்லைன் பதிவு தொடங்குகிறது.

யுவ சங்கத்திற்கான பதிவுகள் (இரண்டாம் கட்டம்) இணையதளத்தின் மூலம் இன்று தொடங்கியது. இது இந்தியாவின் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 1000 இளைஞர்கள் பங்கேற்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முன்முயற்சியின் கீழ், 2023 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சுற்றுப்பயணங்கள் நடத்தப்படும். அவர்கள் 45 முதல் 50 பேர் கொண்ட குழுவாக இரு மாநிலங்களுக்குப் பயணம் செய்வார்கள். அது சுற்றுலா, பாரம்பர்யம், மேம்பாடு, தொழில்நுட்பம் மற்றும் மக்களுக்கு இடையேயான இணைப்பு ஆகிய ஐந்து பரந்த பகுதிகளின் கீழ் பல்வேறு அம்சங்களின் ஆழமான, பல பரிமாண அனுபவத்தை வழங்கும். நிகழ்ச்சியின் மூலம், மொழி, இலக்கியம் ஆகிய துறைகளில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வார்கள். உணவு வகைகள், திருவிழாக்கள், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் சுற்றுலா சுருக்கமாக, அவர்கள் முற்றிலும் மாறுபட்ட புவியியல் மற்றும் கலாச்சார சூழ்நிலையில் வாழும் முதல் அனுபவத்தைப் பெறுவார்கள்.

ஆர்வமுள்ள 18- 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் https://ebsb.aicte-india.org/ என்ற இணையதளத்தில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட தளத்தில் பதிவு செய்யலாம்.

2023 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் வடகிழக்கு பிராந்தியத்தை மையமாகக் கொண்டு 29 சுற்றுப்பயணங்கள் மூலம் இந்தியாவின் 22 மாநிலங்களுக்குச் சென்ற சுமார் 1200 இளைஞர்களின் பெரும் பங்கேற்புடன் யுவ சங்கத்தின் முதல் சுற்று சமீபத்தில் நிறைவடைந்தது. பங்கேற்பாளர்கள் உற்சாகமான அனுபவத்தைப் பெற்றனர். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உண்மையான அர்த்தத்தில் இந்தப் பயணங்கள் அமைந்தன.

ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் ‘யுவ சங்கம்’ என்ற முன்முயற்சியானது நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடையே மக்களை இணைப்பதோடு ஒத்த உணர்வினை வளர்க்கும் நோக்கத்துடன் பல்வேறு அமைச்சகங்களின் கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியானது, நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களிடையே பொதுவான புரிதலை ஏற்படுத்தும் இது நாடு முழுவதும் எதிரொலிக்கும் மற்றும் உண்மையான உன்னதமான பாரதத்தை உருவாக்குவதற்கு மகத்தான பங்களிப்பை வழங்கும்.

எம்.பிரபாகரன்

Leave a Reply