ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் கலாச்சாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற 20-வது அமர்வு மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சித்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளில் கலாச்சாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுக்குள் கலாச்சாரத்துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான அம்சங்கள் குறித்து உறுப்பினர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் தொடக்கவுரையாற்றிய கலாசாரத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் பகிர்ந்து கொள்ளும் வரலாற்று மற்றும் கலாச்சாரத் தொடர்புகளைப் புதுப்பிக்க புத்தர் போதித்த அஹிம்சை மற்றும் அன்பு, உண்மை ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தினார்.
எஸ்.சதிஸ் சர்மா