தெற்கு சூடானைச் சேர்ந்த நாடாளுமன்றப் பிரதிநிதிகள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்.

தெற்கு சூடான் நாட்டின் நாடாளுமன்ற தலைவர் ஜெம்மா நுனு கும்பா தலைமையிலான அந்நாட்டு நாடாளுமன்றப் பிரதிநிதிகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர்.

பிரதிநிதிகளை வரவேற்ற குடியரசுத் தலைவர், இந்தியாவும், தெற்கு சூடானும் அன்பான, நட்பு மிக்க உறவுடன் திகழ்வதாகத் தெரிவித்தார். தெற்கு சூடானின் ஐநா அமைதி பராமரிப்பு இயக்கத்திற்கு  பெருமளவிலான படையை கொண்டுள்ளதில் இந்தியா பெருமைப்படுவதாக அவர் கூறினார். அமைதி நடவடிக்கைகளுக்கு அப்பால் முக்கிய மனிதநேயப் பணிகளில் இந்தியப் படைவீரர்கள் ஈடுபட்டு வருவதாகவும், இருநாடுகளுக்கு இடையில் மேலும் உறவை ஏற்படுத்தும் வகையில் பங்களிப்பு  செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply