தேசிய கடல்சார் தினத்தையொட்டி கடல்சார் விழிப்புணர்வு வாக்கத்தான் போட்டியை மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

60-வது தேசிய கடல்சார் தினத்தையொட்டி கடல்சார் விழிப்புணர்வு வாக்கத்தான் போட்டியை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு சர்பானந்த சோனோவால், மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து, கடல் மாலுமிகள், துறைமுக தொழிலாளர்கள் மற்றும் கடல்சார் துறையில் தொடர்புடைய  அனைவரையும்  உறுதியான கடின உழைப்புக்காக தாம் வணங்குவதாக குறிப்பிட்டார்.

 இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான கடல்சார் துறையின் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டிய திரு சர்பானந்த சோனோவால், கப்பல் போக்குவரத்து நாட்டின் வளமைக்கான வழியாகும் என்று கூறினார். கடல் சார் துறையில் பெண் மாலுமிகளும் சிறந்து விளங்குவதாக அவர் தெரிவித்தார்.  அவர்களுடைய அளப்பரிய பங்களிப்புக்காக தாம் நன்றி தெரிவித்து கொள்வதாகவும் திரு சர்பானந்த சோனோவால் கூறினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply