மக்கள் மருந்தகம் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு விலையுயர்ந்த மருந்துகள் மலிவு விலையில் கிடைப்பது மிகவும் திருப்தி அளிக்கிறது!-பிரதமர் நரேந்திர மோதி.

மக்கள் மருந்தகம் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு விலையுயர்ந்த மருந்துகள் மலிவு விலையில் கிடைப்பது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோதி திருப்தி தெரிவித்துள்ளார்.

பிரதமரின் மக்கள் மருந்தகம் (பிரதான் மந்திரி ஜன் ஔஷதி பரியோஜனா) ஏழைகளுக்கு மலிவு விலையில் மருந்துகளைப் பெறுவதற்கு எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து மத்திய இணை அமைச்சர் திரு. சோம் பிரகாஷின் உணர்ச்சிகரமான ட்விட்டர் பதிவுக்குப் பதிலளித்துள்ள பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரதமரின் ட்விட்டர் பதிவு:

” भावुकता से भरे ऐसे कई उदाहरण हैं, जिनसे प्रधानमंत्री भारतीय जनऔषधि परियोजना की सफलता का पता चलता है। यह देखकर बहुत संतोष होता है कि आज देश में गरीब से गरीब लोग भी महंगी से महंगी दवा आसानी से खरीद सकते हैं।”

எஸ். சதிஸ் சர்மா

திவாஹர்

Leave a Reply