11-வது தேசிய அடித்தட்டு மக்களுக்கான புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் சிறந்த பாரம்பரிய அறிவுசார் விருதுகளை வழங்கிய குடியரசுத் தலைவர் ஃபைன் 2023ஐ தொடங்கி வைத்தார்.

குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் தேசிய புதுமைக் கண்டுபிடிப்புகள் அறக்கட்டளையின் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் 11-வது தேசிய அடித்தட்டு மக்களுக்கான புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் சிறந்த பாரம்பரிய அறிவுசார் விருதுகளை இன்று (ஏப்ரல் 10, 2023) வழங்கிய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, ஃபைன் 2023-ஐ தொடங்கிவைத்தார்.  

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், நாட்டில் அடித்தட்டு நிலையில் உள்ள குடிமக்கள் புதுமைக் கண்டுபிடிப்புகள் தீர்வுகளின் அடிப்படையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் தங்களுடைய சிறந்த திறன்களுடன் நாட்டிற்கு சேவையாற்றுவதாக கூறினார். இதுபோன்ற புதுமைக் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவித்து ஆதரவளிப்பதில் தேசிய புதுமைக் கண்டுபிடிப்புகள் அறக்கட்டளை முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார். நாட்டின் 625 மாவட்டங்களிலிருந்தும், 3,25,000-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப சிந்தனைகள், புதுமைக் கண்டுபிடிப்புகள் மற்றும் பாரம்பரிய அறிவுசார் முறைகளின் தரவுகள் தேசிய புதுமைக் கண்டுபிடிப்புகள் அறக்கட்டளையுடன் இருப்பதாக அவர் கூறினார். தேசிய அளவிலான பல்வேறு நிகழ்ச்சிகளில் 1,093 அடித்தட்டு மக்களுக்கான புதுமைக் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்களை தேசிய புதுமைக் கண்டுபிடிப்புகள் அறக்கட்டளை ஏற்கனவே அங்கீகரித்துள்ளது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

புதுமைக் கண்டுபிடிப்பாளர்களின் சாதனைகளை மட்டும் கொண்டாடாமல் படைப்பாற்றல், புதுமைக் கண்டுபிடிப்புகள், தொழில்முனைவு ஆகிய உத்வேகத்தையும் நாம் இன்று கொண்டாடுவதாக குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.

திவாஹர்

Leave a Reply