ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தற்போதைய தலைமைத்துவத்தைக் கொண்டுள்ள இந்திய வெளியறவு அமைச்சகத்தால் வரையப்பட்ட நிகழ்வுகளின் ஒரு பகுதியாக 2023-ஏப்ரல் 12,13 ஆகிய தேதிகளில் இளம் எழுத்தாளர்கள் மாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது.
இந்த நிகழ்வுகளின் அமலாக்க முகமையான, கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற, தன்னாட்சி அமைப்பான தேசிய புத்தக நிறுவனத்துடன் இணைந்து இளம் எழுத்தாளர்கள் மாநாட்டை மத்திய கல்வி அமைச்சகம் நடத்தவுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையே நாகரீகம் குறித்த உரையாடல்- இளம் எழுத்தாளர்களின் கண்ணோட்டத்தில் இருந்து என்பது இந்த மாநாட்டின் மையப்பொருளாகும். வரலாறு, தத்துவம், பொருளாதாரம், சமயம், கலாச்சாரம், இலக்கியம், அறிவியல், மருந்து ஆகியவை துணைப் பொருட்களாக இருக்கும்.
நவீன கல்வி, பயிற்சி மற்றும் இளைஞர்களுக்கான நவீனப் பயிற்சி, தொழில் முனைவோர் செயல்பாடுகளில் விரிவான ஈடுபாடு, புதுமைத் திட்டங்கள் போன்றவற்றுக்கான பாதைகளை கண்டறிய செயல் ஊக்கம் உள்ள தளங்களை இந்த இரண்டு நாள் மாநாடு ஏற்படுத்தும்.
எஸ்.சதிஸ் சர்மா