ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இளைய எழுத்தாளர்களின் மாநாட்டை மீனாட்சி லேகி புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இளைய எழுத்தாளர்களின் மாநாட்டை திருமதி மீனாட்சி லேகி புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். இந்திய தேசிய புத்தக அறக்கட்டளைத் தலைவர் பேராசிரியர் கோவிந்த் பிரசாத் சர்மா, கல்வித்துறை அமைச்சக இணைச்செயலாளர் திருமதி சௌமியா குப்தா, இந்திய தேசிய புத்தக அறக்கட்டளை இயக்குநர் திரு யுவராஜ் மாலிக் ஆகியோர் தலைமையில் மாநாடு தொடங்கியது. மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு புதுதில்லியில் நேற்று தொடங்கி இன்று நிறைவடைகிறது. 

மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய திருமதி மீனாட்சி லேகி, நமது கலாச்சாரங்களில் ஏராளமான ஒற்றுமைகள் உள்ளன என்றும் இந்த இணைப்புகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். பொதுவான பாரம்பரியத்தின் இணைப்புகளைக் கண்டறிவதற்கான சிந்தனைகளை ஏற்படுத்துவதும், இளைஞர்களின் நாகரீக நெறிமுறைகள் மற்றும் சமூக மதிப்பு முறைகளின் அனுபவங்களிலிருந்து தொடர்ந்து கற்றுக்கொள்வதும் அவசியம் என்று அவர் மேலும் கூறினார்.

திவாஹர்

Leave a Reply