பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அதாவது தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் யோகேஷ் குமார் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கமலேஷ் ஆகியோர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததால் அவர்களின் குடும்பத்தினர் மிகுந்த துயரத்தில் இருக்கின்றனர்.
பஞ்சாப்பில் ராணுவ முகாமில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தமிழக ராணுவ வீரர்கள் இருவர் மரணம் அடைந்ததால் அவர்களின் கிராமத்தில் வசிப்போர் சோகத்தில் இருக்கிறார்கள்.
நாளைய தினம் அவர்களது உடல் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்படும் என தகவல் அளிக்கப்பட்டது.
மத்திய மாநில அரசுகள் உயிரிழந்த ராணுவ குடும்பங்களுக்கு உதவிக்கரமாக செயல்பட வேண்டும்.
வீரர்களின் நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ராணுவப் பணியில் சேர்ந்து பணியில் இருக்கும் போது உயிரிழந்த, தமிழகத்தைச் சேர்ந்த, ராணுவ வீரர்கள் இருவரின் குடும்பங்களுக்கு த.மா.கா சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்