2022 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்த பயணிகள் 247.23 லட்சமாக இருந்த நிலையில், 2023 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் 375.04 லட்சமாக அதிகரித்துள்ளது என்று 2023 மார்ச் மாதத்துக்கான அறிக்கையில் சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார். இது வருடாந்திர வளர்ச்சியில் 51.70 சதவீதமும், மாதாந்திர வளர்ச்சியில் 21.41 சதவீதமும் அதிகமாகும்.
பயணிகள் புகார்களைப் பொறுத்தவரை 2019 மார்ச் மாதத்தோடு (1684 புகார்கள்) ஒப்பிடும் போது 2023 மார்ச் மாதத்தில், (347 புகார்கள்) குறைவாக உள்ளது. அதே சமயம் தீர்வுகள் 93.5 சதவீதத்தில் இருந்து 99 சதவீதமாக அதிகரித்துள்ளது.
திவாஹர்