இந்திய கணக்கு தணிக்கை சேவை பயிற்சி அதிகாரிகளுடன் சிம்லாவில் குடியரசுத் தலைவர் கலந்துரையாடல்.

குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு, இந்திய கணக்கு தணிக்கை சேவைத் துறை பயிற்சி அதிகாரிகளுடன் சிம்லாவில் உள்ள தேசிய கணக்கு தணிக்கை அகாடமியில் கலந்துரையாடினார்.

பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய அவர், இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கை மற்றும் இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறை அதிகாரிகளான நீங்கள் உங்களது செயல்பாடுகளில் வெளிப்பாடுத் தன்மையை கடைப்பிடிக்க வேண்டியது முக்கியமானது என்றார்.

தணிக்கைத் துறையில் டிஜிட்டல் மயமாக்குவதை முன்னிறுத்தி, ஒரே இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறை, ஒரே நடைமுறை என்ற திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியிருப்பது மதிப்புமிக்க நடவடிக்கையாகும் என்று குறிப்பிட்டார். டேட்டா அனல்லிட்டிக்ஸ் எனப்படும் தரவுகள் ஆய்வு,  மெய்நிகர் தணிக்கை அறை உள்ளிட்ட தொழில்நுட்பங்களை, வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்வதற்காக பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்ட அவர், அதே நேரத்தில், மனிதர்களின் தேவை  உள்ள இடத்தில்                                                                                        இந்தத் தொழில் நுட்பங்களைக் கொண்டு சமரசம்செய்து கொள்ளக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

வரித் தொடர்பான முறைகேடுகளை கண்டறிவதைக் காட்டிலும், அரசின் கொள்கைகளை செயல்படுத்துவதற்கான கருவியாக தணிக்கை பயன்பட வேண்டும் என்பதே மத்திய அரசின் முக்கிய இலக்கு என்றார். எனவே, தணிக்கை அதிகாரியின் பரிந்துரைகளை தெளிவான புரிதலோடு மக்களிடம் கொண்டு செல்வது அவசியம் என்றும், இது பொது மக்களுக்கான சேவைகளில் சீர்திருத்தங்களை புகுத்த உதவும் என்றும் குறிப்பிட்டார்.

இந்திய கணக்குத் தணிக்கை சேவை அதிகாரிகள் எப்போதும் மக்களை மையப்படுத்தியே சிந்திக்க வேண்டும் எனவும், தங்களுடையை அணுகுமுறையில் நேர்மையைக் கடைபிடிக்க வேண்டும் என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வலியுறுத்தினார்.        

திவாஹர்  

Leave a Reply