மொரிஷியஸில் பேரரசர் சத்ரபதி சிவாஜியின் சிலை நிறுவப்பட்டதில் ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுவதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர துணை முதலமைச்சர் திரு.தேவேந்திர ஃபட்னாவிஸின் ட்விட்டர் பதிவுக்குப் பதிலளித்த பிரதமர், “ஒவ்வொரு இந்தியரும் இதைப் பார்த்து பெருமிதம் கொள்கிறார்கள்! பேரரசர் சத்ரபதி சிவாஜியின் எண்ணங்கள் உலகளவில் எதிரொலிக்கின்றன. மொரிஷியஸ் பிரதமர் குமார் ஜக்நாத்தின் வருகை இந்த நிகழ்வை மேலும் சிறப்பானதாக்கியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
திவாஹர்