மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்தில் நடைபெற்ற சூரிய வணக்க செயல்விளக்கம், நூற்றுக்கணக்கான யோகா ஆர்வலர்களை ஈர்த்தது .

ஆயுஷ் அமைச்சகத்தின் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் (எம்.டி.என்.ஐ.ஒய்), ஜனவரி மாதம் 2-ம் தேதி சூரிய வணக்க செயல்விளக்கத்திற்கு ஏற்பாடு செய்தது, இது வாழ்க்கையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான யோகா ஆர்வலர்களை ஈர்த்தது.

இந்த நிகழ்ச்சியில் ஆயுஷ் அமைச்சகத்தின் துணை இயக்குநர் ஜெனரல் திரு சத்யஜித் பால், எம்.டி.என்.ஐ.ஒய் இயக்குநர் திருமதி விஜயலட்சுமி பரத்வாஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் உயர் அதிகாரிகள், ஊழியர்கள், எம்.டி.என்.ஐ.ஒய் மாணவர்கள், யோகா ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

சூரிய வணக்கம் என்பது ஒரு ஆன்மீக பயிற்சியாகும், இது ஆசனம், பிராணாயாமம் மற்றும் தியான நுட்பங்கள் ஆகும்.  சூரிய வணக்கத்தின் ஒவ்வொரு படியும் அதன் சொந்த மந்திரத்தைக் கொண்டுள்ளது மற்றும் உடலின் உயிர் சக்தியில் (பிராணா) நேரடி உயிர் விளைவைக் கொண்டுள்ளது. சூரிய வணக்கத்தைத் தவறாமல் பயிற்சி செய்வது, மனம் மற்றும் உடலில் சீரான ஆற்றல் அமைப்புக்கு வழிவகுக்கிறது.

இந்த சூரிய வணக்கம் 2023 ஜனவரி 1 முதல்14 வரை (தெற்கிலிருந்து வடக்கு அரைக்கோளத்திற்கு சூரியனின் பயணத்தை நினைவுகூரும் மகர சக்ராந்தி நாளில்) இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு சூரிய கோயில்களில் ஏற்பாடு செய்யப்பட்ட தொடர்ச்சியான நிகழ்வுகளின் ஒரு பகுதியாகும்.

ஒரே நேரத்தில் 108 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வெற்றிகரமான நிகழ்வைத் தொடர்ந்து, குஜராத்தில் சூரிய வணக்கம் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்தது.

சூரிய வணக்கம் என்பது உடல் மற்றும் மனதை ஒருங்கிணைத்து 12 படிகளில் செய்யப்படும் 8 ஆசனங்களின் தொகுப்பாகும். இதை அதிகாலையில் (சூரிய உதயம்) செய்வது நல்லது.

எம்.டி.என்.ஐ.ஒய்., சார்பில், 500க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள் சூரிய வணக்கம் செய்தனர். இந்த நிகழ்ச்சி தூர்தர்ஷன், ஆயுஷ் அமைச்சகத்தின் பல்வேறு சமூக ஊடக தளங்கள் வழியாகவும் ஒளிபரப்பப்பட்டது.

எம்.பிரபாகரன்

Leave a Reply