ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்தா நோய்த்தொற்றுக் குறியீடுகளை உள்ளடக்கிய தொகுதியை மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் டாக்டர். முஞ்ச்பரா மகேந்திரபாய் துவக்கி வைத்தார்.

உலக சுகாதார நிறுவனத்தால் ஐசிடி 11, பாரம்பரிய மருத்துவத் தொகுதி 2 இன்று அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அதைச் செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி மருத்துவத்தின் அடிப்படையிலான நோய்கள் தொடர்பான தரவு மற்றும் சொற்கள் WHO ICD-11 வகைப்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த முயற்சியின் மூலம், ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்த மருத்துவத்தில் நோய்களை வரையறுக்கும் சொற்கள் ஒரு குறியீடாக குறியிடப்பட்டு, WHO நோய் வகைப்பாடு தொடர் ICD-11 இல் சேர்க்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து ஆயுஷ் அமைச்சகம், ஐசிடி-11 தொடரின் டிஎம்-2 தொகுதியின் கீழ் ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி அமைப்புகளில் பயன்படுத்தப்படும் நோய்களின் வகைப்பாட்டை தயாரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு மற்றும் ஆயுஷ் அமைச்சகம் இடையே நன்கொடையாளர் ஒப்பந்தமும் இந்த வகைப்பாட்டிற்காக முன்னதாக கையெழுத்தானது. இந்த முயற்சி இந்தியாவின் ஹெல்த்கேர் டெலிவரி சிஸ்டம், ஆராய்ச்சி, ஆயுஷ் இன்சூரன்ஸ் கவரேஜ், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பாலிசி உருவாக்கும் முறையை மேலும் வலுப்படுத்தி விரிவுபடுத்தும். இது தவிர, சமூகத்தில் ஏற்படும் பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்த எதிர்கால உத்திகளை வகுக்க இந்தக் குறியீடுகளைப் பயன்படுத்தலாம்.

இந்திய வாழ்விட மையத்தில் ICD-11, TM Module-2 ஐ அறிமுகப்படுத்தி, ஆயுஷ் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான மத்திய இணை அமைச்சர் டாக்டர் முஞ்சாபரா மகேந்திரபாய், இந்தியாவில் உலகளாவிய தரத்துடன் ஆயுஷ் மருத்துவத்தை ஒருங்கிணைத்து நவீனமயமாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றார்.

திவாஹர்

Leave a Reply