ஊரக மின்மய நிறுவனத்தின் 9 மாத லாபம் உயர் அளவாக ரூ.10,003 கோடி எனப் பதிவாகியுள்ளது.

ஊரக மின்மய நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு 2023, டிசம்பர் 31  உடன் முடிவடைந்த காலாண்டு & காலத்திற்கான தணிக்கை செய்யப்படாத முழுமையான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட நிதி முடிவுகளுக்கு இன்று ஒப்புதல் அளித்தது.

மேம்பட்ட சொத்துத் தரம், கடன் விகிதங்களின் அதிகரிப்பு மற்றும் நிதிச் செலவின் திறமையான மேலாண்மை காரணமாக, ஊரக மின்மய நிறுவனம் அதன் மிக உயர்ந்த 9 மாத  லாபமான ரூ. 10,003 கோடியைப் பதிவு செய்ய முடிந்துள்ளது. இதன் விளைவாக, 2022, டிசம்பர் 31 அன்று ஒரு பங்கின் மதிப்பு ரூ. 40.79 என்பதிலிருந்து 2023, டிசம்பர் 31  அன்று ரூ. 50.65 ஆக அதிகரித்தது.

லாப அதிகரிப்பின் உதவியுடன், நிகர மதிப்பு 2023, டிசம்பர் 31 நிலவரப்படி ரூ. 64,787 கோடியாக அடிகரித்துள்ளது, இது சென்ற ஆண்டைவிட 18% அதிகரிப்பு.

எம்.பிரபாகரன்

Leave a Reply