அருண் ஜேட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்தின் தகுதிகாண் பருவப் பயிற்சிக்கான 31-வது தொகுப்பைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவரை சந்தித்தனர்.

அருண் ஜேட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்தின் தகுதிகாண் பருவப் பயிற்சிக்கான 31-வது தொகுப்பைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகள் இன்று (பிப்ரவரி 5, 2024) குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்தனர். இந்த அதிகாரிகள் இந்திய சிவில் கணக்குப் பணி, இந்தியப் பாதுகாப்பு கணக்குப் பணி மற்றும் இந்திய பி & டி (நிதி மற்றும் கணக்கு) பணி ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், சிறந்த அரசு நிதி முகாமைத்துவ முறைமையே நல்லாட்சியின் அடிப்படை என்பது அனைவரும் அறிந்த உண்மை எனக் குறிப்பிட்டார். நிர்வாகத்தில் இவர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இவர்கள் நிர்வாகத்தில் நேர்மை மற்றும் விவேகத்தை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.  இவர்கள் தங்கள் திறன்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தப் பொறுப்பை மிகுந்த நேர்மையுடன் தோளில் சுமக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நாடு டிஜிட்டல் மாற்றத்தைச் சந்தித்து வரும் நேரத்தில், அதிகாரிகள்  பணியில் இணைந்துள்ளதாகக் குடியரசுத் தலைவர் கூறினார். வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை ஏற்படுத்தும் அதே வேளையில், சேவைகளை வழங்குவதில் அதிகச் செயல்திறன் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்தக் கவலைகளை நிவர்த்தி செய்ய, அரசுத் துறைகள் தொழில்நுட்பத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துவதும், நிர்வாக முறையை மக்களை மையமாகக் கொண்டதாகவும், திறமையானதாகவும், வெளிப்படையாகவும் மாற்றுவது அவசியமாகும். நிதி ஆதாரங்களின் பயன்பாட்டை அதிகபட்சமாக்குவது மட்டுமல்லாமல், கொள்கை மாற்றங்களின் தாக்கத்தைப் பகுப்பாய்வு செய்வது, நிதி மேலாண்மை அமைப்புகள் உட்பட பல்வேறு நிர்வாக அமைப்புகளை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்களை முன்மொழிவது ஆகியவை அவர்களின் வேலை என்று அவர் கூறினார்.   இந்தப் பணிகளை மேற்கொள்ள எப்போதும் மாறிவரும் மற்றும் முன்னேறும் தொழில்நுட்ப உலகிற்கு ஏற்ப வேகத்தை வைத்திருக்குமாறு அவர்களைக் குடியரசுத் தலைவர் அறிவுறுத்தினார். சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்குவதும், நமது கணக்கியல் மற்றும் தணிக்கை முறைகளை தடையற்றதாக மாற்றுவதும் அவர்களின் முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply