இந்தியா போர்ட் குளோபல் லிமிடெட் மற்றும் ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பு (பிஎம்ஓ) ஆகியவற்றுக்கு இடையே ஷாஹித் பெஹெஷ்டி துறைமுக முனையத்தின் மேம்பாட்டிற்கான நீண்டகால முக்கிய ஒப்பந்தம்.

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீ சர்பானந்தா சோனோவால் 13 மே 2024 அன்று ஈரானின் சபாஹருக்கு விஜயம் செய்து, சபாஹரின் ஷாஹித் பெஹெஷ்டி துறைமுக முனையத்தை மேம்படுத்துவதற்கான நீண்ட கால முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்தியா போர்ட் குளோபல் லிமிடெட் (ஐபிஜிஎல்) மற்றும் ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பு (பிஎம்ஓ) இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

மத்திய அமைச்சர் ஈரானின் சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சரான HE Mehrdad Bazrpash உடன் பயனுள்ள இருதரப்பு சந்திப்பை நடத்தினார். இணைப்பு முயற்சிகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், சபஹர் துறைமுகத்தை பிராந்திய இணைப்பு மையமாக மாற்றவும் தங்கள் தலைவர்களின் பொதுவான பார்வையை அமைச்சர்கள் நினைவு கூர்ந்தனர்.

அமைச்சரின் வருகையும் நீண்ட கால ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றும் பரந்த மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தகத்திற்கான நுழைவாயிலாக சபாஹரின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

சபாஹர் துறைமுகத் திட்டத்தின் வளர்ச்சி இந்தியா-ஈரான் முதன்மைத் திட்டமாகும்.

திவாஹர்

Leave a Reply