மக்களவைத் தேர்தல் 2024-ன் 7-வது கட்டத்தில் 8 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்தக் கட்டத்தில் 57 மக்களவைத் தொகுதிகளுக்கு மொத்தம் 2,105 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பரிசீலனைக்குப் பின் 954 மனுக்கள் செல்லத்தக்கவையாக ஏற்கப்பட்டன.
7-வது கட்டத்தில் அதிகபட்சமாக பஞ்சாபில் 13 மக்களவைத் தொகுதிகளில் 598 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு அடுத்தபடியாக உத்தரப்பிரதேசத்தின் 13 மக்களவைத் தொகுதிகளில் 495 மனுக்கள் தாக்கலாயின. பீகாரில் உள்ள ஜஹனாபாத் மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக 73 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், பஞ்சாபின் லூதியானாவில் 70 மனுக்கள் பெறப்பட்டன.
மக்களவைத் தேர்தல் 2024 7-வது கட்டத்தில் மாநிலம் / யூனியன் பிரதேசம் வாரியான விவரம்
வ.எண். | மாநிலம் / யூனியன் பிரதேசம் | 7-வது கட்டத்தில் மொத்தத் தொகுதிகள் | பெறப்பட்ட வேட்பு மனுக்கள் | பரிசீலனைக்குப் பின் செல்லத்தக்க மனுக்கள் | மனுக்கள் திரும்பப் பெறப்பட்ட பின் இறுதியாக போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை | |
1 | பீகார் | 8 | 372 | 138 | 134 | |
2 | சண்டிகர் | 1 | 33 | 20 | 19 | |
3 | இமாச்சலப் பிரதேசம் | 4 | 80 | 40 | 37 | |
4 | ஜார்க்கண்ட் | 3 | 153 | 55 | 52 | |
5 | ஒடிசா | 6 | 159 | 69 | 66 | |
6 | பஞ்சாப் | 13 | 598 | 353 | 328 | |
7 | உத்தரப் பிரதேசம் | 13 | 495 | 150 | 144 | |
8 | மேற்கு வங்கம் | 9 | 215 | 129 | 124 | |
மொத்தம் | 57 | 2105 | 954 | 904 |
எம்.பிரபாகரன்