லெப்டினென்ட் ஜெனரல் என் எஸ் ராஜா சுப்பிரமணி ராணுவ துணைத் தளபதியாக இன்று பொறுப்பேற்றார். இவர் லக்னோவைத் தளமாகக் கொண்ட மத்திய கமாண்டின் தலைமை கமாண்டிங் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
லெப்டினென்ட் ஜெனரல் என் எஸ் ராஜா சுப்பிரமணி, 1985- ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கார்வால் ரைஃபிள்ஸ் படைப்பிரிவில் பணியில் சேர்ந்தார். தேசிய பாதுகாப்பு கல்விக்கழகம் மற்றும் இந்திய ராணுவ கல்விக் கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்ற இவர், பிரிட்டனின் பிராக்னெலில் உள்ள ராணுவக் கல்லூரி மற்றும், புதுதில்லியில் உள்ள தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் முன்னாள் மாணவருமாவார். லண்டன் கிங்ஸ் கல்லூரியில் முதுநிலை பட்டம் பெற்ற இவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வில், எம்.ஃபில் பட்டம் பெற்றார்.
37 ஆண்டுகளுக்கும் மேலாக தேசப்பாதுகாப்பில் இவரது பணிகளைப் பாராட்டும் விதமாக மத்திய அரசு, பரம் விசிஷ்ட் சேவா பதக்கம், அதி விசிஷ்ட் சேவா பதக்கம், சேனா பதக்கம், விசிஷ்ட் சேவா பதக்கம் ஆகியவற்றை வழங்கி கௌரவித்தது.
எம்.பிரபாகரன்